அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், இந்தியக் கிராமப்புறங்களில் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கை ஒரு சிறுவனின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது.
பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கங்கை நதியில் மிதக்கவிட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி, உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமித் என்ற 14 வயதுடைய சிறுவன் தோட்டத்தில் விளையாடிய போது பாம்பு கடித்துள்ளது.
உயிருக்கு ஊசலாடிய சிறுவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குப் பதிலாக, அவனது குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியை நாடியுள்ளனர்.
கங்கை நதியில் மிதக்கவிட்டால் விஷம் தானாக இறங்கிவிடும் என அந்த மந்திரவாதி கூறியதை அவர்கள் அப்படியே நம்பியுள்ளனர்.
அமித்தின் உடலை மூங்கில் கம்புகளில் கட்டி, சுமார் 12 மணி நேரம் ஓடும் ஆற்று நீரில் மிதக்கவிட்டுள்ளனர்.
ஆற்றில் மிதக்க விட்டும் எந்த அசைவும் இல்லாததைக் கண்ட பின்னரே, குடும்பத்தினர் அச்சமடைந்து சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அமித்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் மந்திரவாதி மற்றும் குடும்பத்தினர் மீது தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாம்பு கடித்த சிறுவனை ஆற்றில் மிதக்க விட்ட குடும்பம்-மூடநம்பிக்கையால் பலியாகிய உயிர் https://www.facebook.com/share/v/1KgaaB7psL/அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், இந்தியக் கிராமப்புறங்களில் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கை ஒரு சிறுவனின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது.பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கங்கை நதியில் மிதக்கவிட்ட அவலம் அரங்கேறியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி, உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமித் என்ற 14 வயதுடைய சிறுவன் தோட்டத்தில் விளையாடிய போது பாம்பு கடித்துள்ளது.உயிருக்கு ஊசலாடிய சிறுவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குப் பதிலாக, அவனது குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியை நாடியுள்ளனர்.கங்கை நதியில் மிதக்கவிட்டால் விஷம் தானாக இறங்கிவிடும் என அந்த மந்திரவாதி கூறியதை அவர்கள் அப்படியே நம்பியுள்ளனர்.அமித்தின் உடலை மூங்கில் கம்புகளில் கட்டி, சுமார் 12 மணி நேரம் ஓடும் ஆற்று நீரில் மிதக்கவிட்டுள்ளனர்.ஆற்றில் மிதக்க விட்டும் எந்த அசைவும் இல்லாததைக் கண்ட பின்னரே, குடும்பத்தினர் அச்சமடைந்து சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.ஆனால், அமித்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் மந்திரவாதி மற்றும் குடும்பத்தினர் மீது தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.