வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று இரவு குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் குடும்பத்தலைவர் சடலமாக மீட்பு வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்று இரவு குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.