• Jun 17 2026

செம்மணி புதைகுழியில் 10 என்புக்கூடுகள் அகழ்வு: இரு சிறுவர்கள், கைக்குழந்தையும் அடையாளம்

Chithra / Jun 16th 2026, 7:22 am
image


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் 

நேற்று  நடைபெற்றன. 


இதன்போது, இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 10 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.


நேற்றைய அகழ்வின் போது புதிதாக 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 


இவ்வாறு மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இப்பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் மூலம், மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செம்மணி புதைகுழியில் 10 என்புக்கூடுகள் அகழ்வு: இரு சிறுவர்கள், கைக்குழந்தையும் அடையாளம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று  நடைபெற்றன. இதன்போது, இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 10 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.நேற்றைய அகழ்வின் போது புதிதாக 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இப்பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் மூலம், மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement