வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.
எதிர்வரும் 25ம் திகதி முதல் வெசாக் தினம் வரை அப்பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது இதற்கு அனைத்து அரசியல்வாதிகள் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரையும் வருகை தருமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிறோஸ் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்தார்.
இதேவேளை மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அனுர குமார ஏன் எமது காணிகளை விடவில்லை என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மயிலிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மா வினை அவர்களின் அரசாங்கத்தை இல்லாமல் செய்தது.
அதேபோல் அனுர அரசாங்கமும் மக்களை துன்பப்படும் வகையில் மேற்கொள்ளும் எந்த ஒரு கர்ம வினையும் அவர்களின் அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கும்.
நாங்கள் அரசாங்கத்திடம் வாழ்வதற்கு பணம் கேட்கவில்லை எமது சொந்த பணத்தில் வாங்கிய காணியை இராணுவ பிடிக்குள் இருந்து மீட்டுத்தருமாறு கோருகிறோம்.
ஆகவே மஹிந்த அரசாங்கத்துக்கு நடந்த கர்ம வினையை நினைவில் கொண்டு மக்களின் காணிகள் மக்களுக்கு என வாக்குறுதி வழங்கியபடி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
36 ஆண்டுகள் கடந்தும் அகதியாகவே வாழ்கிறோம் அநுரவின் வாக்குறுதிகள் எங்கே மயிலிட்டியில் போராட்டம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.எதிர்வரும் 25ம் திகதி முதல் வெசாக் தினம் வரை அப்பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது இதற்கு அனைத்து அரசியல்வாதிகள் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரையும் வருகை தருமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன்போது வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிறோஸ் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்தார்.இதேவேளை மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அனுர குமார ஏன் எமது காணிகளை விடவில்லை என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.மயிலிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மா வினை அவர்களின் அரசாங்கத்தை இல்லாமல் செய்தது.அதேபோல் அனுர அரசாங்கமும் மக்களை துன்பப்படும் வகையில் மேற்கொள்ளும் எந்த ஒரு கர்ம வினையும் அவர்களின் அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கும்.நாங்கள் அரசாங்கத்திடம் வாழ்வதற்கு பணம் கேட்கவில்லை எமது சொந்த பணத்தில் வாங்கிய காணியை இராணுவ பிடிக்குள் இருந்து மீட்டுத்தருமாறு கோருகிறோம்.ஆகவே மஹிந்த அரசாங்கத்துக்கு நடந்த கர்ம வினையை நினைவில் கொண்டு மக்களின் காணிகள் மக்களுக்கு என வாக்குறுதி வழங்கியபடி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.