இந்திய ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் மாதுலன் குகதாஸ் ஒட்டுமொத்த உலகையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்திய ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் இலங்கை தம்புள்ளை மைதானத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
வெற்றிக்காக 266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.
இதற்கமைய, போட்டியின் முடிவு சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்கள் சூப்பர் ஓவர் முறையை தேர்ந்தெடுத்தனர்.
சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, வெறும் 09 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்மூலம் சூப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை இலங்கை ஏ அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையில் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் வீரர் மாதுலன் குகதாஸ்.
வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் மாதுலன் குகதாஸ், அனைவரின் கவனத்தையும் தன்னகத்தே ஈர்த்துள்ளார்.
போட்டி சமநிலையில் முடிவடைந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் பெரும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, இலங்கை அணியின் வெற்றி குறித்த இளம் வீரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் இந்திய அணியின் வல்லமை கொண்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியிருந்த நிலையில் மைதானமே அமைதியாக இருந்த திக் திக் நொடியில் எவ்வித பதற்றமுமின்றி மாதுலன் பந்து வீசினார்.
தனது துல்லியமான பந்து வீச்சு வெற்றியால் இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையை வைத்த மாதுலன் சூப்பர் ஓவரை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இலங்கை அணிக்கு ஒரு மறக்க முடியாத காவிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பெரிய வசதிகளோ பின்னணிகளோ இன்றி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் உருவான சாதாரண வீரர் மாதுலன், ஏற்கனவே தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவானிடமிருந்து பாராட்டைப் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் சுழற்பந்து வீச்சாளராகவும் பயிற்சி பெற்றிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.
தடைகளை உடைத்து உலக மேடையில் சாதித்து தமிழ் சமூகத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ள யாழ்ப்பாணத்து சிங்கம் ாதுலன் குகதாஸிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இலங்கை அணிக்கு காவிய வெற்றி - உலகை திரும்பிப் பார்க்க வைத்த யாழ் வீரர் மாதுலன் குகதாஸ் இந்திய ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் மாதுலன் குகதாஸ் ஒட்டுமொத்த உலகையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்திய ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் இலங்கை தம்புள்ளை மைதானத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. வெற்றிக்காக 266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கமைய, போட்டியின் முடிவு சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்கள் சூப்பர் ஓவர் முறையை தேர்ந்தெடுத்தனர். சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, வெறும் 09 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.இதன்மூலம் சூப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை இலங்கை ஏ அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையில் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் வீரர் மாதுலன் குகதாஸ். வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் மாதுலன் குகதாஸ், அனைவரின் கவனத்தையும் தன்னகத்தே ஈர்த்துள்ளார். போட்டி சமநிலையில் முடிவடைந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் பெரும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, இலங்கை அணியின் வெற்றி குறித்த இளம் வீரரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் இந்திய அணியின் வல்லமை கொண்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியிருந்த நிலையில் மைதானமே அமைதியாக இருந்த திக் திக் நொடியில் எவ்வித பதற்றமுமின்றி மாதுலன் பந்து வீசினார். தனது துல்லியமான பந்து வீச்சு வெற்றியால் இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையை வைத்த மாதுலன் சூப்பர் ஓவரை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இலங்கை அணிக்கு ஒரு மறக்க முடியாத காவிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். பெரிய வசதிகளோ பின்னணிகளோ இன்றி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் உருவான சாதாரண வீரர் மாதுலன், ஏற்கனவே தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவானிடமிருந்து பாராட்டைப் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் சுழற்பந்து வீச்சாளராகவும் பயிற்சி பெற்றிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். தடைகளை உடைத்து உலக மேடையில் சாதித்து தமிழ் சமூகத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ள யாழ்ப்பாணத்து சிங்கம் ாதுலன் குகதாஸிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.