• May 18 2026

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Aathira / Sep 21st 2025, 3:28 pm
image

ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை மின்சார சபை தற்போது  நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கையினால் 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிப்படைய உள்ளனர்.

இதுவரை இந்த காலாண்டில் மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச் செலவுகள் ஏற்பட்டு உள்ளன.

இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.48 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மின்சார சபை தற்போது  நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையினால் 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிப்படைய உள்ளனர்.இதுவரை இந்த காலாண்டில் மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச் செலவுகள் ஏற்பட்டு உள்ளன.இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.48 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement