• Apr 18 2026

திருமலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண்

Chithra / Sep 24th 2025, 1:16 pm
image


திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். 

உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.

குறித்த பெண் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்ட ட இடத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பூர் பொலிஸார் ஆகியோர் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

திடீர் மரண விசாரணை அதிகாரி யூசூப் லாபிர் விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக இன்று  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மூன்னெடுத்து வருகின்றனர். 


திருமலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண் திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.குறித்த பெண் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்ட ட இடத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பூர் பொலிஸார் ஆகியோர் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.திடீர் மரண விசாரணை அதிகாரி யூசூப் லாபிர் விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக இன்று  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மூன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement