அசாமின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை (5) 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். கடும் பனிப்பொழிவை சந்தித்து வரும் வடகிழக்கு மாநில மக்கள், நிலநடுக்க அச்சத்தால் திறந்த வெளியில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதேசமயம் பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலஅதிர்வை அண்டைய பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல்பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
அதேசமயம் மத்திய கிழக்கு பூட்டான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்க தேசமும் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் அசாமின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை (5) 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். கடும் பனிப்பொழிவை சந்தித்து வரும் வடகிழக்கு மாநில மக்கள், நிலநடுக்க அச்சத்தால் திறந்த வெளியில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதேசமயம் பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலஅதிர்வை அண்டைய பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல்பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.அதேசமயம் மத்திய கிழக்கு பூட்டான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்க தேசமும் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://www.facebook.com/share/v/1FYrB69QKV/