• Apr 18 2026

சைலன்சர்களுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்; கட்டுநாயக்கவில் சிக்கிய 25 கோடி ரூபா 'குஷ்'

Chithra / Apr 3rd 2026, 11:22 am
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

படவிளக்கம் 


சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 


ராகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படுத்தினர்.


இதன்போது, அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 வாகனங்களின் புகையிரைப்பான்களுக்குள் (சைலன்சர்கள்) மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 


அந்த சைலன்சர்களுக்குள் இருந்து 25 கிலோ 500 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான "சிவப்பு வழி" ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன இலங்கைக் சுங்கப் பிரிவினரால் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.


சைலன்சர்களுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்; கட்டுநாயக்கவில் சிக்கிய 25 கோடி ரூபா 'குஷ்' கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். படவிளக்கம் சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ராகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது, அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 வாகனங்களின் புகையிரைப்பான்களுக்குள் (சைலன்சர்கள்) மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சைலன்சர்களுக்குள் இருந்து 25 கிலோ 500 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான "சிவப்பு வழி" ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன இலங்கைக் சுங்கப் பிரிவினரால் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement