• May 22 2026

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு துரத தீர்வு அவசியம் அனுர ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

dorin / May 21st 2026, 8:51 pm
image

படகுகள் பழுதடைந்து, போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைக் காலமாக நெடுந்தீவு மக்களுக்கான கடற்போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுவரும் பல்வேறு இடையூறுகள் மற்றும் நெருக்கடிகள்; அதற்கான தீர்வுகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து   கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துக் கூறிய டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு மக்களிடம் இருந்து தமக்கான கடல் போக்குவரத்து பிரச்சினைளகள் தொடர்பில நாளாந்தம் பல தோலைபேசி அழைப்புகள் என்னிடம் வந்தகொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினை இன்று மட்டுமல்ல அன்று எமது ஆட்சிக் காலத்திலும் இருந்ததுதான். 

ஆனாலும் அன்று இவ்வாறான பிரச்சினைகள் வந்தபோது அதற்கான தீர்வுகளை நாம் உடனடியாக ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.

குறிப்பாக தற்போது நெடுத்தீவின் போக்குவரத்து சேவையை பிரதான படகுகளான குமுதினி, வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுகள் மேற்கொண்டுவருகின்றன.  ஆனால் அவை மூன்றும் தற்போது பழுதடைந்து திருத்த வேலைகளை எதிர்கொண்டுவருகின்றன.

இதேநேரம் நெடுந்திவின் போக்குவரத்து சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக எமது ஆட்சிக் காலந்தில் பேருபொருளாக இருந்த இவ்விடையம், துறைசார் தரப்பினருடன் ஆராயப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையே தமக்கான கடமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் அதை ஏற்று இலவசமான போக்குவரத்து சேவையை இன்றுவரை முன்னெடுத்து வந்திருந்தனர்.

ஆனாலும் இன்று குறித்த மூன்று படகுகளும் பழுதடைந்து செயற்பாடற்று இருப்பதால் மாற்று வழியின்றி மக்கள் பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் அனுர ஜனாதிபதி இதில் தலையிட்டு கடற்போக்குவரத்து சேவைக்கு குறிப்பாக இந்தக் கடற்பரப்பில் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள படகொன்றை வாடககை;கு அமர்த்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கின்றது.

அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நான் நினைவூட்டுகின்றேன்.

அதேபோன்று கூட்டுறவுச் சங்கமும் “தேவா ரதம்” என்ற ஒரு படகு வைத்திருந்தது. அதுவும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது. 

எனவே கொழும்பில் இருக்கும் தேசிய கூட்டுறவு சபையிடம் பரிந்துரைத்து செய்து குறித்த படகை திருத்துவதற்கான ஒரு கடனுதவியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் அனுர ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.

அத்துடன் குறித்த கடனுதவி நெடுந்தீவு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமல்லாது தீவக பகுதியில் இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேசிய கூட்டுறவு சபையின் ஊடாக ஓர் இலகு கடன் உதவி கடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவானந்தா நிகழ்கால மற்றும் எதிர்காலங்களில் மக்கள் உணவு தட்டுப்பாடு அல்லது விலையேற்றத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதால் தேசிய கூட்டுறவு சபையுடன் கதைத்து தீவக கூட்டுறவு சங்கங்களுக்கு இலகு கடன் கிடைக்கச் செய்வதனூடாக மக்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இலகுவாக கடைக்க செய்ய முடியும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு துரத தீர்வு அவசியம் அனுர ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை படகுகள் பழுதடைந்து, போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.அண்மைக் காலமாக நெடுந்தீவு மக்களுக்கான கடற்போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுவரும் பல்வேறு இடையூறுகள் மற்றும் நெருக்கடிகள்; அதற்கான தீர்வுகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து   கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்துக் கூறிய டக்ளஸ் தேவானந்தா,நெடுந்தீவு மக்களிடம் இருந்து தமக்கான கடல் போக்குவரத்து பிரச்சினைளகள் தொடர்பில நாளாந்தம் பல தோலைபேசி அழைப்புகள் என்னிடம் வந்தகொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினை இன்று மட்டுமல்ல அன்று எமது ஆட்சிக் காலத்திலும் இருந்ததுதான். ஆனாலும் அன்று இவ்வாறான பிரச்சினைகள் வந்தபோது அதற்கான தீர்வுகளை நாம் உடனடியாக ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.குறிப்பாக தற்போது நெடுத்தீவின் போக்குவரத்து சேவையை பிரதான படகுகளான குமுதினி, வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுகள் மேற்கொண்டுவருகின்றன.  ஆனால் அவை மூன்றும் தற்போது பழுதடைந்து திருத்த வேலைகளை எதிர்கொண்டுவருகின்றன.இதேநேரம் நெடுந்திவின் போக்குவரத்து சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக எமது ஆட்சிக் காலந்தில் பேருபொருளாக இருந்த இவ்விடையம், துறைசார் தரப்பினருடன் ஆராயப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையே தமக்கான கடமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் அதை ஏற்று இலவசமான போக்குவரத்து சேவையை இன்றுவரை முன்னெடுத்து வந்திருந்தனர்.ஆனாலும் இன்று குறித்த மூன்று படகுகளும் பழுதடைந்து செயற்பாடற்று இருப்பதால் மாற்று வழியின்றி மக்கள் பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.அந்தவகையில் அனுர ஜனாதிபதி இதில் தலையிட்டு கடற்போக்குவரத்து சேவைக்கு குறிப்பாக இந்தக் கடற்பரப்பில் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள படகொன்றை வாடககை;கு அமர்த்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கின்றது.அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நான் நினைவூட்டுகின்றேன்.அதேபோன்று கூட்டுறவுச் சங்கமும் “தேவா ரதம்” என்ற ஒரு படகு வைத்திருந்தது. அதுவும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது. எனவே கொழும்பில் இருக்கும் தேசிய கூட்டுறவு சபையிடம் பரிந்துரைத்து செய்து குறித்த படகை திருத்துவதற்கான ஒரு கடனுதவியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் அனுர ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.அத்துடன் குறித்த கடனுதவி நெடுந்தீவு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமல்லாது தீவக பகுதியில் இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேசிய கூட்டுறவு சபையின் ஊடாக ஓர் இலகு கடன் உதவி கடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவானந்தா நிகழ்கால மற்றும் எதிர்காலங்களில் மக்கள் உணவு தட்டுப்பாடு அல்லது விலையேற்றத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதால் தேசிய கூட்டுறவு சபையுடன் கதைத்து தீவக கூட்டுறவு சங்கங்களுக்கு இலகு கடன் கிடைக்கச் செய்வதனூடாக மக்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இலகுவாக கடைக்க செய்ய முடியும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement