வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தாமதங்களுக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, 45 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நிர்வாகக் குறைபாடுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கேள்விக்கோரல் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆராயுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்போது, 2026 மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தற்போது 14 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதில் குறிப்பிடத்தக்க தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 6 இலட்சத்து 78 ஆயிரம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்னும் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையை தீர்ப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் மேலும் இரண்டு அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், திணைக்களத்தின் நாளாந்த அச்சிடும் திறன் தற்போதைய சுமார் 4,600 அனுமதிப் பத்திரங்களில் இருந்து 8,200 ஆக அதிகரிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களுக்கான சேவைகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திணைக்களத்தில் நிலவும் காலியான நிர்வாகப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும் என நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற மக்கள் இன்னும் காத்திருக்க வேண்டுமா தீர்வு எப்போது வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தாமதங்களுக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, 45 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.நிர்வாகக் குறைபாடுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கேள்விக்கோரல் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆராயுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டுள்ளது.இதன்போது, 2026 மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தற்போது 14 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதில் குறிப்பிடத்தக்க தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 6 இலட்சத்து 78 ஆயிரம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்னும் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலைமையை தீர்ப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் மேலும் இரண்டு அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், திணைக்களத்தின் நாளாந்த அச்சிடும் திறன் தற்போதைய சுமார் 4,600 அனுமதிப் பத்திரங்களில் இருந்து 8,200 ஆக அதிகரிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், பொதுமக்களுக்கான சேவைகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திணைக்களத்தில் நிலவும் காலியான நிர்வாகப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும் என நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.