ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தமையை வரவேற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கைக்கு தற்போதைக்கு அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தமையை வரவேற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கைக்கு தற்போதைக்கு அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.