ஹட்டன் பொலிஸாரின் காவலில் இருந்த போது தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சநதேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் பிடிபட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் பொலிஸார் இந்த தகவலை வழங்கியுள்ளனர்.
பொலிஸாரின் தடுப்புக் காவலில் இருந்த போது சந்தேக நபர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (27) கண்டி, தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது தப்பிச் சென்ற அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.
இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகளை பொலிஸார் மறுத்ததுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் உறுதிபடுத்தினர்.
இவர் ஹட்டன், டிக்கோயா நகரப் பகுதியில் வயதான கணவன்-மனைவியைக் கொலை செய்துவிட்டு அவர்களின் தங்கள நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னதாக கைது செய்யப்பட்டார்.
டிக்கோயா நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் வசித்து வந்த தம்பதியினர், கடந்த வெள்ளிக்கிழமை (22) அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேக நபர் இன்னும் தலைமறைவு ஹட்டன் பொலிஸாரின் காவலில் இருந்த போது தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சநதேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் பிடிபட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் பொலிஸார் இந்த தகவலை வழங்கியுள்ளனர்.பொலிஸாரின் தடுப்புக் காவலில் இருந்த போது சந்தேக நபர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (27) கண்டி, தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும், சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது தப்பிச் சென்ற அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகளை பொலிஸார் மறுத்ததுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் உறுதிபடுத்தினர்.இவர் ஹட்டன், டிக்கோயா நகரப் பகுதியில் வயதான கணவன்-மனைவியைக் கொலை செய்துவிட்டு அவர்களின் தங்கள நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னதாக கைது செய்யப்பட்டார்.டிக்கோயா நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் வசித்து வந்த தம்பதியினர், கடந்த வெள்ளிக்கிழமை (22) அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.