திருகோணமலை, கருமலையூற்றுப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலை பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர நேற்று (02) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்திரலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எச். எம். ஹேமந்தகுமார மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இப்பள்ளிவாசல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1836 ஆம் ஆண்டு தனித்துவமான இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2008 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் 'உயர் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டு முப்படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர் அங்கு பொதுமக்கள் எவரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி இரவு, அடையாளம் காண முடியாத அளவுக்கு இப்பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினரின் பிடியிலிருந்த பள்ளிவாசல் காணிக்குள் நீண்டகாலமாக நுழைய முடியாமல் இருந்த கருமலையூற்றுப் பகுதி மக்கள், நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, இடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் தமது வரலாற்றுப் பள்ளிவாசலை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், அங்கு சென்று வழக்கம்போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கி, அதனைத் தங்களுக்கு மீட்டுத் தருமாறு மக்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.
இவ்விஜயத்திற்கு முன்னதாக, நேற்று காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர,
"யுத்த காலத்தில் முப்படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் தனியார் காணிகளை, இயலுமானவரை மிக விரைவில் உரிய மக்களிடமே மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில்கொண்டு, இது தொடர்பாக பாதுகாப்புச் சபையுடனும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட இறுதி முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த கருமலையூற்று வரலாற்றுப் பள்ளிவாசலை நேரில் பார்வையிட்டார் பிரதி பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலை, கருமலையூற்றுப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலை பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர நேற்று (02) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்திரலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எச். எம். ஹேமந்தகுமார மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இப்பள்ளிவாசல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1836 ஆம் ஆண்டு தனித்துவமான இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2008 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் 'உயர் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டு முப்படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் அங்கு பொதுமக்கள் எவரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி இரவு, அடையாளம் காண முடியாத அளவுக்கு இப்பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.பாதுகாப்புத் தரப்பினரின் பிடியிலிருந்த பள்ளிவாசல் காணிக்குள் நீண்டகாலமாக நுழைய முடியாமல் இருந்த கருமலையூற்றுப் பகுதி மக்கள், நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.இதன்போது, இடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் தமது வரலாற்றுப் பள்ளிவாசலை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், அங்கு சென்று வழக்கம்போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கி, அதனைத் தங்களுக்கு மீட்டுத் தருமாறு மக்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.இவ்விஜயத்திற்கு முன்னதாக, நேற்று காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர,"யுத்த காலத்தில் முப்படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் தனியார் காணிகளை, இயலுமானவரை மிக விரைவில் உரிய மக்களிடமே மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில்கொண்டு, இது தொடர்பாக பாதுகாப்புச் சபையுடனும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட இறுதி முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.