தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (ஜூன் 15) முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த சிறப்புத் திட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் வளாகங்களைச் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த ஒழிப்பு வாரம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன.
அதேபோல், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் நாளாக 19ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளன.
டெங்கு பரவல் தீவிரம்: இன்று முதல் நாடு முழுவதும் ஒழிப்பு வாரம் ஆரம்பம் தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (ஜூன் 15) முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த சிறப்புத் திட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் வளாகங்களைச் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த ஒழிப்பு வாரம் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன. அதேபோல், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் நாளாக 19ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளன.