இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 98,616 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது.
மாகாண ரீதியில் மொத்த நோயாளர்களில் பாதியளவுக்கும் மேல் (52.62%) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இரண்டாம் இடத்தில் தென் மாகாணம் 14,209 நோயாளர்களுடன் உள்ளது.
மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 20,917 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 19,435 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,410 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 34 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிடர்க் (High-risk) மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பரிசோதித்து, கொசுக்கள் பெருக்கமடையும் இடங்களை உடனடியாக அழித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு
இலங்கையில் 75 ஆக உயர்ந்த டெங்கு பலி: 98,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.இதுவரை நாடு முழுவதும் 98,616 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது.மாகாண ரீதியில் மொத்த நோயாளர்களில் பாதியளவுக்கும் மேல் (52.62%) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இரண்டாம் இடத்தில் தென் மாகாணம் 14,209 நோயாளர்களுடன் உள்ளது.மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 20,917 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 19,435 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,410 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது நாடு முழுவதும் 34 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிடர்க் (High-risk) மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பரிசோதித்து, கொசுக்கள் பெருக்கமடையும் இடங்களை உடனடியாக அழித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தீவிரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.