• May 06 2026

டில்லி பயணம் ஓகே.. தேர்தல் எப்போது? ஜனாதிபதியிடம் எதிரணி கேள்வி

Aathira / Feb 21st 2026, 11:01 am
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மாத்திரம் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மாத்திரம் சுருங்கிவிடக் கூடாது.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது நீண்டகாலமாகச் செயலிழந்து காணப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு.

எனவே, இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அப்பால், உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்." - என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

டில்லி பயணம் ஓகே. தேர்தல் எப்போது ஜனாதிபதியிடம் எதிரணி கேள்வி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மாத்திரம் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:"இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மாத்திரம் சுருங்கிவிடக் கூடாது.இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது நீண்டகாலமாகச் செயலிழந்து காணப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு.எனவே, இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அப்பால், உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்." - என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement