• Sep 29 2026

அருகம்பை சுற்றுலாப் பகுதிக்கு வந்த ஆபத்து - வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Sep 29th 2026, 12:23 pm
image


அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத ஆபத்து ஏற்பட்டுள்ளது.


நேற்று (28) மாலை காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.


சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆனால், இதன் பின்னணியில் அப்பகுதியில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களான அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகளில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடமாடுகின்றனர்.


இந்நிலையில், குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அருகம்பை சுற்றுலாப் பகுதிக்கு வந்த ஆபத்து - வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத ஆபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று (28) மாலை காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால், இதன் பின்னணியில் அப்பகுதியில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களான அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகளில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடமாடுகின்றனர்.இந்நிலையில், குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement