• Sep 24 2026

மன்னாரில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தில் முறைகேடு? RTI ஆவணங்களால் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி

Chithra / Sep 23rd 2026, 4:02 pm
image


2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட இரு நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


2007 டிசம்பர் மாதம் குறித்த போட்டிப் பரீட்சை நடைபெற்றதாகவும், முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, நியமனம் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், குறித்த பரீட்சையில் 38 புள்ளிகளைப் பெற்ற இருவருக்கு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், 38 புள்ளிகளைப் பெற்ற பலர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் இருவருக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் நியமன விதிமுறைகள் மீறப்பட்டதுடன், அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நியமனம் தொடர்பில் ஆதாரங்களுடன் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இதுவரை குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் முறைப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


தகுதி மற்றும் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நியமனம் பெற வேண்டியவர்களை புறக்கணித்து, தகுதி வரம்பை பூர்த்தி செய்யாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அது வேலைவாய்ப்புக்காக காத்திருந்த ஏனைய பரீட்சார்த்திகளின் வாய்ப்பை பறித்த செயற்பாடாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த நியமனங்களின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் அல்லது வேறு காரணிகள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்பட்டுள்ளது.


எனவே, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய இதுபோன்ற நியமன முறைகேடுகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தில் முறைகேடு RTI ஆவணங்களால் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி 2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட இரு நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.2007 டிசம்பர் மாதம் குறித்த போட்டிப் பரீட்சை நடைபெற்றதாகவும், முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, நியமனம் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும், குறித்த பரீட்சையில் 38 புள்ளிகளைப் பெற்ற இருவருக்கு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், 38 புள்ளிகளைப் பெற்ற பலர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் இருவருக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நியமன விதிமுறைகள் மீறப்பட்டதுடன், அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த நியமனம் தொடர்பில் ஆதாரங்களுடன் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இதுவரை குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் முறைப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.தகுதி மற்றும் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நியமனம் பெற வேண்டியவர்களை புறக்கணித்து, தகுதி வரம்பை பூர்த்தி செய்யாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அது வேலைவாய்ப்புக்காக காத்திருந்த ஏனைய பரீட்சார்த்திகளின் வாய்ப்பை பறித்த செயற்பாடாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த நியமனங்களின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் அல்லது வேறு காரணிகள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்பட்டுள்ளது.எனவே, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய இதுபோன்ற நியமன முறைகேடுகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement