• Apr 17 2026

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்துக; ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Ziya / Mar 20th 2026, 5:27 pm
image

வடபகுதிக் கடற்பரப்புக்களில் தற்போது வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால் வடபகுதி மீனவர்கள் நொந்துபோயுள்ளதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.


அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 25ஆளணியில், 15ஆளணி வெற்றிடங்கள் பூத்திசெய்யப்படாதிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களங்களில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளையும் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


கடற்கரையோடு அண்டி இருப்பவர்கள் பெரும்பாலும் மீனவர்களே. இவர்களுடைய வாழ்வாதாரம் என்பது மீன் பிடித்தலே ஆகும். அந்த வருமானத்தின்மூலமே தங்களுடைய குடும்ப வாழ்கையை சீராக கொண்டுசெல்கின்றனர். 


முன்னைய காலங்களில் இப்படி மோமான தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. 


அண்மைக்காலமாக மிக மோசமான வகையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


குறிப்பிட்ட சில சட்டவிரோதிகள் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்வதால், கடற்றொழிலே கதி என்று இருக்கின்ற பல ஆயிரக்கணக்கான  மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. 


அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்வதால் எமது மீனவர்களின் சீரான கடற்றொழில் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன.


குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக் கடற்பரப்புக்கள் உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் பலத்த பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றன


அதிலும் குறிப்பாக தீவுப்பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.


வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எமது மீனவர்கள் நொந்துபோயுள்ளனர்.


இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அலுவலகங்களில் ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.


அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளரிடம் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.


இந்நிலையில் தம்மிடம் போதிய ஆளணிகள் இல்லை எனத் தெரிவித்து, தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதென உதவிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் 17.01.2025 ஆம் திகதிய தரவுகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தம் 25 பணியாட் தொகுதியில், வெறுமனே 10பேரே கடமையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்தவகையில் 15 பேருக்குரிய ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகவும் அந்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இவ்வாறாக பாரிய ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.


எனவே இன்னும் எவ்வளவு காலம்தான் போதிய ஆளணி இல்லை, எம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிக்கொண்டு இருக்கபோகின்றீர்கள்.


முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் துறைத் திணைக்களத்தில் உள்ள இந்த ஆளணி பற்றாக்குறைகள் தொடர்பில் கடந்த 2025ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே கடற்றொழில் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.


எனினும் அந்த ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.


விரைவாக இந்த ஆளணிப் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்வதோடு, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் முற்றாகக் கட்டுப்படுத்துங்கள்.


வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களை சட்டவிரோதிகளின் கைகளில் விட்டுவிடாமல் காப்பாற்றுங்கள் என்றுதான் நேர்மையான, உண்மையான மீனவர்களின்சார்பாக இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்துக; ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடபகுதிக் கடற்பரப்புக்களில் தற்போது வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால் வடபகுதி மீனவர்கள் நொந்துபோயுள்ளதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 25ஆளணியில், 15ஆளணி வெற்றிடங்கள் பூத்திசெய்யப்படாதிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களங்களில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளையும் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கடற்கரையோடு அண்டி இருப்பவர்கள் பெரும்பாலும் மீனவர்களே. இவர்களுடைய வாழ்வாதாரம் என்பது மீன் பிடித்தலே ஆகும். அந்த வருமானத்தின்மூலமே தங்களுடைய குடும்ப வாழ்கையை சீராக கொண்டுசெல்கின்றனர். முன்னைய காலங்களில் இப்படி மோமான தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. அண்மைக்காலமாக மிக மோசமான வகையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.குறிப்பிட்ட சில சட்டவிரோதிகள் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்வதால், கடற்றொழிலே கதி என்று இருக்கின்ற பல ஆயிரக்கணக்கான  மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்வதால் எமது மீனவர்களின் சீரான கடற்றொழில் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன.குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக் கடற்பரப்புக்கள் உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் பலத்த பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றனஅதிலும் குறிப்பாக தீவுப்பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எமது மீனவர்கள் நொந்துபோயுள்ளனர்.இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அலுவலகங்களில் ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளரிடம் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.இந்நிலையில் தம்மிடம் போதிய ஆளணிகள் இல்லை எனத் தெரிவித்து, தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதென உதவிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் 17.01.2025 ஆம் திகதிய தரவுகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தம் 25 பணியாட் தொகுதியில், வெறுமனே 10பேரே கடமையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில் 15 பேருக்குரிய ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகவும் அந்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறாக பாரிய ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.எனவே இன்னும் எவ்வளவு காலம்தான் போதிய ஆளணி இல்லை, எம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிக்கொண்டு இருக்கபோகின்றீர்கள்.முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் துறைத் திணைக்களத்தில் உள்ள இந்த ஆளணி பற்றாக்குறைகள் தொடர்பில் கடந்த 2025ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே கடற்றொழில் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.எனினும் அந்த ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.விரைவாக இந்த ஆளணிப் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்வதோடு, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் முற்றாகக் கட்டுப்படுத்துங்கள்.வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களை சட்டவிரோதிகளின் கைகளில் விட்டுவிடாமல் காப்பாற்றுங்கள் என்றுதான் நேர்மையான, உண்மையான மீனவர்களின்சார்பாக இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement