நுவரெலியா - ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இலங்கையில் முதல்முதலில் தேயிலை நாட்டப்பட்ட இடத்தில் உள்ள பழமையான பாடசாலை ஆதவன் தமிழ் பாடசாலையில் புதிய இரண்டு மாடி கட்டிடம் அமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா பாடசாலை அதிபர் எஸ்.மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்வி பிரதி அமைச்சர் மதூர செனவிரத்தின மற்றும் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரட்ட மற்றும் சிவப்பிரகாசம் கல்வி திணைக்கள அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் கட்டடத்திறப்பு நுவரெலியா - ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இலங்கையில் முதல்முதலில் தேயிலை நாட்டப்பட்ட இடத்தில் உள்ள பழமையான பாடசாலை ஆதவன் தமிழ் பாடசாலையில் புதிய இரண்டு மாடி கட்டிடம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா பாடசாலை அதிபர் எஸ்.மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கல்வி பிரதி அமைச்சர் மதூர செனவிரத்தின மற்றும் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரட்ட மற்றும் சிவப்பிரகாசம் கல்வி திணைக்கள அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .