• May 22 2026

கட்டுநாயக்கவில் பரபரப்பு; அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட பல விமானங்கள்

Chithra / May 22nd 2026, 8:01 am
image

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது


தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வருகை தந்த 9 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்களும், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்களும், 

அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட் நிறுவனத்தின் ஒரு விமானமும் மற்றும் குவைத்திலிருந்து வந்த ஜசீரா நிறுவனத்தின் ஒரு விமானமும் என மொத்தம் 06 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.


மேலும், டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமும், இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானமும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


அத்துடன், இந்தியாவின் புதுடில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானமும் மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 


கட்டுநாயக்கவில் பரபரப்பு; அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட பல விமானங்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுதற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வருகை தந்த 9 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்களும், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்களும், அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட் நிறுவனத்தின் ஒரு விமானமும் மற்றும் குவைத்திலிருந்து வந்த ஜசீரா நிறுவனத்தின் ஒரு விமானமும் என மொத்தம் 06 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.மேலும், டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமும், இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானமும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.அத்துடன், இந்தியாவின் புதுடில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானமும் மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement