• May 31 2026

வெசாக் கூடுகளால் வண்ணமயமான கொழும்பு - கண்களைக் கவரும் காட்சிகள்!

shanu / May 30th 2026, 10:48 pm
image

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்பை அலங்கரிக்கும் வகையில் வெசாக் தோரணங்கள் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   


கொழும்பு முழுவதும்  தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


தோரணங்கள், வெசாக் கூடுகள் ஆங்காங்கே பல்வேறு வண்ணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 


பார்ப்போரின் கண்களைக் கவரும் வகையில் கொழும்பு நகரம் வண்ண அலங்காரங்களால் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் ஈர்த்துள்ளது. 


இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் தன்சல் நிகழ்வு, நாளை இரவு 7.00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெசாக் கூடுகளால் வண்ணமயமான கொழும்பு - கண்களைக் கவரும் காட்சிகள் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்பை அலங்கரிக்கும் வகையில் வெசாக் தோரணங்கள் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   கொழும்பு முழுவதும்  தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தோரணங்கள், வெசாக் கூடுகள் ஆங்காங்கே பல்வேறு வண்ணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்போரின் கண்களைக் கவரும் வகையில் கொழும்பு நகரம் வண்ண அலங்காரங்களால் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் ஈர்த்துள்ளது. இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் தன்சல் நிகழ்வு, நாளை இரவு 7.00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement