சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை – தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (01) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் கே.எம். றிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை மாணவர்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பலூன்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை – தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (01) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.கல்லூரியின் முதல்வர் கே.எம். றிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை மாணவர்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பலூன்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.