புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
அன்று காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு இரவு ஏழு மணி வரை நடைபெற்றது .
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்க உபதலைவர் கருணாகரன் குணாளன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் ஞாபகார்த்த அறக்கட்டளை நிதியில் நுளம்பு வலைகள், உலருணவு, மதிய உணவு, சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு சூழகம் அமைப்பு செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் கௌரி சங்கரி தவராசா நினைவாக 15 மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டதோடு வைத்தியசாலையின் பாவனைக்கான கிருமி நாசினி பொருட்களும் வழங்கப்பட்டன .
குறித்த செயற்பாட்டு நிகழ்வுகளில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் பிரதம குருக்களும் , கனடா துர்க்கை அம்மன் ஆலய பிரதம குருக்களுமான பஞ்சாட்சர ஐயர் கிருஸ்ணராசா குருக்கள் , தமிழ் நாடு விழுப்புரம் மாவட்ட ஆலய சுப்பிரமணிய குருக்கள், புங்குடுதீவு முரளி சர்மா குருக்கள், சூழகம் அமைப்பின் போசகரும் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவருமான கௌரவ கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்க தலைவர் வைத்தியர் C. தாரணி, புங்குடுதீவு உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
விசேடமாக புங்குடுதீவு சுலக்சனா இலவச கல்வி நிலையத்தின் 'விழுதுகள்' குழும மாணவர்களும் ஆசிரியர்களும் மேற்படி சிரமதான நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் வெறுமனே நிவாரணப் பொருட்களை வழங்காது,
சுமார் 75 பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியான பாரிய சிரமதான செயற்பாடாக இச்செயற்பாடு அமைந்துள்ளதாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் தாரணி பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதான பணி புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.அன்று காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு இரவு ஏழு மணி வரை நடைபெற்றது . புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்க உபதலைவர் கருணாகரன் குணாளன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் ஞாபகார்த்த அறக்கட்டளை நிதியில் நுளம்பு வலைகள், உலருணவு, மதிய உணவு, சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.அத்தோடு சூழகம் அமைப்பு செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் கௌரி சங்கரி தவராசா நினைவாக 15 மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டதோடு வைத்தியசாலையின் பாவனைக்கான கிருமி நாசினி பொருட்களும் வழங்கப்பட்டன . குறித்த செயற்பாட்டு நிகழ்வுகளில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் பிரதம குருக்களும் , கனடா துர்க்கை அம்மன் ஆலய பிரதம குருக்களுமான பஞ்சாட்சர ஐயர் கிருஸ்ணராசா குருக்கள் , தமிழ் நாடு விழுப்புரம் மாவட்ட ஆலய சுப்பிரமணிய குருக்கள், புங்குடுதீவு முரளி சர்மா குருக்கள், சூழகம் அமைப்பின் போசகரும் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவருமான கௌரவ கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்க தலைவர் வைத்தியர் C. தாரணி, புங்குடுதீவு உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.விசேடமாக புங்குடுதீவு சுலக்சனா இலவச கல்வி நிலையத்தின் 'விழுதுகள்' குழும மாணவர்களும் ஆசிரியர்களும் மேற்படி சிரமதான நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் வெறுமனே நிவாரணப் பொருட்களை வழங்காது, சுமார் 75 பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியான பாரிய சிரமதான செயற்பாடாக இச்செயற்பாடு அமைந்துள்ளதாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் தாரணி பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.