ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த சரக்கு லொறி ஒன்று இன்று சனிக்கிழமை (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளை பகுதியில் சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியினுள் சிக்கியிருந்த லொறியின்சாரதி, சுமார் ஒன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முற்பட்டபோது, லொறி வேககட்டுப்பாட்டை இழந்தமையினால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் லொறியில் சாரதியும் அவரது உதவியாளரும் மாத்திரமே இருந்துள்ளனர்.
மீட்கப்பட்ட சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தசம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் சரக்கு லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த சரக்கு லொறி ஒன்று இன்று சனிக்கிழமை (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளை பகுதியில் சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் லொறியினுள் சிக்கியிருந்த லொறியின்சாரதி, சுமார் ஒன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முற்பட்டபோது, லொறி வேககட்டுப்பாட்டை இழந்தமையினால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் லொறியில் சாரதியும் அவரது உதவியாளரும் மாத்திரமே இருந்துள்ளனர். மீட்கப்பட்ட சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தசம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.