• May 18 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்; வீதியை விட்டு விலகி பற்றைக்குள் புகுந்தது!

shanu / Jan 5th 2026, 12:49 pm
image

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் அருகிலிருந்த பற்றைக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்து குருநாகல் - புத்தளம் வீதியின் பதெனிய சந்திக்கு அருகிலுள்ள மரகஸ்கொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 


குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்ததால் அருகிலிருந்த பற்றைக்குள் புகுந்துள்ளது. 


பற்றைக்குள் புகுந்ததில் அங்கிருந்த மரக்கிளைகள் கார் மீது முறிந்து விழுந்துள்ளது. விபத்தில் உயிர் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.


எனினும் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்; வீதியை விட்டு விலகி பற்றைக்குள் புகுந்தது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் அருகிலிருந்த பற்றைக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குருநாகல் - புத்தளம் வீதியின் பதெனிய சந்திக்கு அருகிலுள்ள மரகஸ்கொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்ததால் அருகிலிருந்த பற்றைக்குள் புகுந்துள்ளது. பற்றைக்குள் புகுந்ததில் அங்கிருந்த மரக்கிளைகள் கார் மீது முறிந்து விழுந்துள்ளது. விபத்தில் உயிர் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.எனினும் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement