பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் மாத்திரம் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எடுக்கக் கூடாது என்றும், சிவில் மற்றும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகள் மற்றும் திருத்தங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பைஸர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கூட்டுக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டம் கூடவுள்ளது.
இந்தச் சட்டவாக்கத்தைக் குழு ஆராய்வதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியால் பகிரங்கமாக வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்தாலோசனைச் செயன்முறையை அரசு நிறைவு செய்வதற்கு முன்னதாகவே, இந்தச் சட்டமூலத்துக்குக் குழு அங்கீகாரம் வழங்குவதற்கோ, வழிமொழிவதற்கோ அல்லது சாதகமான பரிந்துரையொன்றை வெளியிடுவதற்கோ உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தே எமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளோம்.
ஆரம்பகட்டப் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படலாம் எனினும், அர்த்தமுள்ள வகையில் பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைகள் இடம்பெறும் வரை அங்கீகாரம் வழங்குவதோ அல்லது வழிமொழிவதோ ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான நிலைப்பாடாகும்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டவாக்கத்தை அரசு நாடாளுமன்றத்தின் ஊடாக அவசர அவசரமாக நிறைவேற்றாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 நவம்பர் 7ஆம் திகதி பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளை எழுப்பிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்துதல், அவர்களின் ஆட்சேபனைகளைக் கருத்திற்கொள்ளுதல் மற்றும் பரந்தளவிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தல் ஆகியவை அவரது உறுதிமொழிகளில் உள்ளடங்கியிருந்தன.
கலந்தாலோசனைகளை நடத்துவதாக வழங்கப்பட்ட பகிரங்க உறுதிமொழிக்கும், அத்தகைய கலந்தாலோசனைகள் நிறைவடைவதற்கு முன்னரே ஓர் உறுதியான முடிவை எட்டக்கூடிய குழுவின் செயன்முறைக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே நாடாளுமன்றக் கரிசனை எழுகின்றது.
அரசு அறிவித்த கலந்தாலோசனைச் செயன்முறையுடன் அதன் முன்மொழியப்பட்ட சட்டவாக்கக் கால அட்டவணை எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதை விளக்குமாறு கோருவதற்கு இதுவொரு முக்கிய அடிப்படையை வழங்குகின்றது.
பல சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், அரசுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்புத் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத்துக்குத் தெளிவாக அதிகாரம் உண்டு. எனினும், ஜனாதிபதியால் பகிரங்கமாக வழங்கப்பட்ட கலந்தாலோசனை உறுதிமொழியை அரசு நிறைவேற்றுவதற்கு முன்னரும், பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னரும் இந்தச் சட்டமூலத்தைக் குழு வழிமொழிய வேண்டுமா என்பதே தற்போதுள்ள பிரதான பிரச்சினையாகும் என்றுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அவசரமாக வேண்டாம் ஐந்து எம்.பிக்கள் கடிதம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் மாத்திரம் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எடுக்கக் கூடாது என்றும், சிவில் மற்றும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகள் மற்றும் திருத்தங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பைஸர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கூட்டுக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டம் கூடவுள்ளது. இந்தச் சட்டவாக்கத்தைக் குழு ஆராய்வதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியால் பகிரங்கமாக வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்தாலோசனைச் செயன்முறையை அரசு நிறைவு செய்வதற்கு முன்னதாகவே, இந்தச் சட்டமூலத்துக்குக் குழு அங்கீகாரம் வழங்குவதற்கோ, வழிமொழிவதற்கோ அல்லது சாதகமான பரிந்துரையொன்றை வெளியிடுவதற்கோ உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தே எமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளோம்.ஆரம்பகட்டப் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படலாம் எனினும், அர்த்தமுள்ள வகையில் பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைகள் இடம்பெறும் வரை அங்கீகாரம் வழங்குவதோ அல்லது வழிமொழிவதோ ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான நிலைப்பாடாகும்.பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டவாக்கத்தை அரசு நாடாளுமன்றத்தின் ஊடாக அவசர அவசரமாக நிறைவேற்றாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 நவம்பர் 7ஆம் திகதி பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளை எழுப்பிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்துதல், அவர்களின் ஆட்சேபனைகளைக் கருத்திற்கொள்ளுதல் மற்றும் பரந்தளவிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தல் ஆகியவை அவரது உறுதிமொழிகளில் உள்ளடங்கியிருந்தன.கலந்தாலோசனைகளை நடத்துவதாக வழங்கப்பட்ட பகிரங்க உறுதிமொழிக்கும், அத்தகைய கலந்தாலோசனைகள் நிறைவடைவதற்கு முன்னரே ஓர் உறுதியான முடிவை எட்டக்கூடிய குழுவின் செயன்முறைக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே நாடாளுமன்றக் கரிசனை எழுகின்றது. அரசு அறிவித்த கலந்தாலோசனைச் செயன்முறையுடன் அதன் முன்மொழியப்பட்ட சட்டவாக்கக் கால அட்டவணை எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதை விளக்குமாறு கோருவதற்கு இதுவொரு முக்கிய அடிப்படையை வழங்குகின்றது.பல சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், அரசுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்புத் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத்துக்குத் தெளிவாக அதிகாரம் உண்டு. எனினும், ஜனாதிபதியால் பகிரங்கமாக வழங்கப்பட்ட கலந்தாலோசனை உறுதிமொழியை அரசு நிறைவேற்றுவதற்கு முன்னரும், பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னரும் இந்தச் சட்டமூலத்தைக் குழு வழிமொழிய வேண்டுமா என்பதே தற்போதுள்ள பிரதான பிரச்சினையாகும் என்றுள்ளது.