யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் சந்தியிலேயே இன்று மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; யாழில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் சந்தியிலேயே இன்று மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.