• Apr 21 2026

காலி கோட்டை புராதன நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை சுற்றுலா மேம்பாட்டிற்கு பய்னபடுத்த அமைச்சரவை அனுமதி!

shanu / Apr 7th 2026, 5:42 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத்திற்கான அமைப்பு உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காலி கோட்டையைப் பார்வையிடுவதற்காகவும், மற்றும் தமது ஓய்வு நேரத்தை பொழுதுபோக்காகக் கழிப்பதற்காக வருடாந்தம் 03 இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர். 


ஆனாலும், நிர்வாகஃநிறுவனப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்கள் அதிகமாகக் காணப்படுகின்ற காலி கோட்டையில் ஒருசில வீதிகள் பகல் வேளைகளில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்படுவதாலும், இரவு வேளைகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடமாகவும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இப்பிரதேசத்தில் நடமாடும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 


காலி பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் (2021 – 2030) கீழ் காலி கோட்டை உலக மரபுரிமை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காலி கோட்டையில் தற்போது காணப்படுகின்ற தொல்லியல் பெறுமதிகளுடன் கூடிய கட்டிடங்களைப் பாதுகாத்து சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ‘காலி மறுமலர்ச்சிக் கருத்திட்டம்’ எனும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 


குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதியில் தற்போது காலி கோட்டைக்குள் இயங்கி வருகின்ற மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தை நிறுவி, அக்கட்டிடத்தை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் சுற்றுலா மேம்பாட்டுக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

காலி கோட்டை புராதன நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை சுற்றுலா மேம்பாட்டிற்கு பய்னபடுத்த அமைச்சரவை அனுமதி ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத்திற்கான அமைப்பு உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காலி கோட்டையைப் பார்வையிடுவதற்காகவும், மற்றும் தமது ஓய்வு நேரத்தை பொழுதுபோக்காகக் கழிப்பதற்காக வருடாந்தம் 03 இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர். ஆனாலும், நிர்வாகஃநிறுவனப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்கள் அதிகமாகக் காணப்படுகின்ற காலி கோட்டையில் ஒருசில வீதிகள் பகல் வேளைகளில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்படுவதாலும், இரவு வேளைகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடமாகவும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இப்பிரதேசத்தில் நடமாடும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. காலி பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் (2021 – 2030) கீழ் காலி கோட்டை உலக மரபுரிமை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காலி கோட்டையில் தற்போது காணப்படுகின்ற தொல்லியல் பெறுமதிகளுடன் கூடிய கட்டிடங்களைப் பாதுகாத்து சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ‘காலி மறுமலர்ச்சிக் கருத்திட்டம்’ எனும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதியில் தற்போது காலி கோட்டைக்குள் இயங்கி வருகின்ற மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தை நிறுவி, அக்கட்டிடத்தை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் சுற்றுலா மேம்பாட்டுக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement