• Jul 17 2026

பஸ் - டிப்பர் மோதி கோர விபத்து; 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி

Chithra / Jul 17th 2026, 9:40 am
image


கொழும்பு மாவட்டத்தின் கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்புப் படையினர் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக வெளியேற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இந்த மோதலால் பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் - டிப்பர் மோதி கோர விபத்து; 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி கொழும்பு மாவட்டத்தின் கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்புப் படையினர் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக வெளியேற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இந்த மோதலால் பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement