அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்த 87 மாலுமிகளின் உடல்களைக் கையாள்வதில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
இந்த உடல்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு வைத்தியசாலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்துத் தமக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் எஸ்.டி.யு.எம். ரங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் ஈரானிய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் அதிகளவிலான உடல்கள் கொண்டு வரப்பட்டபோது, அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
போதிய குளிரூட்டி வசதிகள் இல்லாத நிலையில், உடல்கள் சிதையாமல் இருக்கத் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த உடல்களை இலங்கையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால், அதனை இலகுவாகச் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். "உள்ளூரில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டால் மாநகரசபை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ஒரே நாளில் அந்தப் பணிகளை எம்மால் நிறைவு செய்ய முடியும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்த 87 மாலுமிகளின் உடல்கள்; திணறும் வைத்தியசாலை நிர்வாகம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்த 87 மாலுமிகளின் உடல்களைக் கையாள்வதில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. இந்த உடல்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு வைத்தியசாலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்துத் தமக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் எஸ்.டி.யு.எம். ரங்க தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் ஈரானிய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரே நேரத்தில் அதிகளவிலான உடல்கள் கொண்டு வரப்பட்டபோது, அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.போதிய குளிரூட்டி வசதிகள் இல்லாத நிலையில், உடல்கள் சிதையாமல் இருக்கத் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்த உடல்களை இலங்கையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால், அதனை இலகுவாகச் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். "உள்ளூரில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டால் மாநகரசபை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ஒரே நாளில் அந்தப் பணிகளை எம்மால் நிறைவு செய்ய முடியும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.