• May 21 2026

கையடக்கத் தொலைபேசி தொலைந்தால் உஷார்: இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Chithra / May 21st 2026, 7:05 pm
image

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தினந்தோறும் பதிவாகும் கையடக்கத் தொலைபேசி திருட்டுகள் மற்றும் இழப்புகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தவறவிடப்படும் அல்லது திருடப்படும் இத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்லும்போது, அவை பாரதூரமான முறையில் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசிகள் பெரும்பாலும் சமூக விரோத, குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே குற்றவாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன. 


இதனால், தொலைபேசிகளின் உண்மையான உரிமையாளர்கள் எவ்வித குற்றமும் செய்யாமலேயே சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.


தொலைபேசிகளில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கிச் கணக்கு சார்ந்த நிதித் தரவுகள் திருடப்படுவதன் மூலம், உரிமையாளர்கள் எதிர்பாராதவிதமாகப் பாரிய பொருளாதார மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


எனவே, பொதுமக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தொலைபேசிகள் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கையடக்கத் தொலைபேசி தொலைந்தால் உஷார்: இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தினந்தோறும் பதிவாகும் கையடக்கத் தொலைபேசி திருட்டுகள் மற்றும் இழப்புகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தவறவிடப்படும் அல்லது திருடப்படும் இத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்லும்போது, அவை பாரதூரமான முறையில் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசிகள் பெரும்பாலும் சமூக விரோத, குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே குற்றவாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தொலைபேசிகளின் உண்மையான உரிமையாளர்கள் எவ்வித குற்றமும் செய்யாமலேயே சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.தொலைபேசிகளில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கிச் கணக்கு சார்ந்த நிதித் தரவுகள் திருடப்படுவதன் மூலம், உரிமையாளர்கள் எதிர்பாராதவிதமாகப் பாரிய பொருளாதார மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தொலைபேசிகள் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement