• Apr 17 2026

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட செல்வதை தவிர்க்கவும்! பொதுமக்களுக்கு வந்த எச்சரிக்கை

Chithra / Dec 8th 2025, 12:32 pm
image


அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் ‘117’ என்ற துரித இலக்கம் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


நிவாரணங்களை வழங்கும்போது மாவட்டச் செயலாளர் ஊடாக உரிய முறைமைக்கு அமைய அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.


கனமழை காரணமாக மண் ஈரப்பதத்துடன் உள்ளமையினால் விழிப்புடன் இருக்குமாறும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் போதெல்லாம் உடனடியாக குறித்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.


அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும் அது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்தார். 


வெள்ள நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்வதாகவும், அதனால் நீரில் குளிப்பதையும், களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


அதேநேரம், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிவாரணக் குழுக்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட செல்வதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு வந்த எச்சரிக்கை அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் ‘117’ என்ற துரித இலக்கம் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.நிவாரணங்களை வழங்கும்போது மாவட்டச் செயலாளர் ஊடாக உரிய முறைமைக்கு அமைய அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.கனமழை காரணமாக மண் ஈரப்பதத்துடன் உள்ளமையினால் விழிப்புடன் இருக்குமாறும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் போதெல்லாம் உடனடியாக குறித்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும் அது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்தார். வெள்ள நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்வதாகவும், அதனால் நீரில் குளிப்பதையும், களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிவாரணக் குழுக்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement