• Jul 17 2026

மோட்டார்சைக்கிளை மோதி விட்டுத் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டி!

shanu / Jul 16th 2026, 4:08 pm
image

ஹட்டன் நகர மத்தியில்  மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு முச்சக்கரவண்டி தப்பியோடியுள்ளது. 


இச் சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் ஹட்டன் நகர மத்தியில் உள்ள வீதி கடவைக்கு வெள்ளைக்கோட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை தவறான திசையில் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.


விபத்தை ஏற்படுத்திய பின்னர் குறித்த முச்சக்கரவண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார்சைக்கிளை மோதி விட்டுத் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நகர மத்தியில்  மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு முச்சக்கரவண்டி தப்பியோடியுள்ளது. இச் சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் ஹட்டன் நகர மத்தியில் உள்ள வீதி கடவைக்கு வெள்ளைக்கோட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை தவறான திசையில் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.விபத்தை ஏற்படுத்திய பின்னர் குறித்த முச்சக்கரவண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement