• Apr 18 2026

தையிட்டி போராட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல்; வலி.வடக்கு பிரதேசசபை அமர்வில் கறுப்புப்பட்டி அணிந்த உறுப்பினர்கள்!

shanu / Dec 31st 2025, 5:54 pm
image

தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர். 


வலி.வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. 


அதன்போது, கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் வேலன் சுவாமி , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என ஐவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நீதிமன்றினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


அந்நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமிகள் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர். 


குறித்த சம்பவங்களை கண்டித்து , பொலிஸாரின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து , வலி வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

தையிட்டி போராட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல்; வலி.வடக்கு பிரதேசசபை அமர்வில் கறுப்புப்பட்டி அணிந்த உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர். வலி.வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. அதன்போது, கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் வேலன் சுவாமி , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என ஐவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நீதிமன்றினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.அந்நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமிகள் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர். குறித்த சம்பவங்களை கண்டித்து , பொலிஸாரின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து , வலி வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement