இன்றைய அவசர உலகில் சோர்வு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தூக்கமின்மை எனப் பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டாலும், உங்கள் சோர்வு நீண்ட நாட்களாகத் தொடர்கிறது என்றால் அதனைச் சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
இது புற்றுநோய் போன்ற தீவிர பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் எனச் சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சையத் அஃப்ரோஸ் ஹுசைன் எச்சரிக்கிறார்.
வழக்கமான சோர்வு என்பது ஓய்வு எடுத்தாலோ அல்லது நன்றாகத் தூங்கி எழுந்தாலோ சரியாகிவிடும்.
ஆனால் புற்றுநோய் தொடர்பான சோர்வு என்பது முற்றிலும் மாறுபட்டது
நபோதுமான ஓய்வு எடுத்த பிறகும், தூங்கி எழுந்த பிறகும் சோர்வு குறையாமல் அப்படியே இருக்கும்.
படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எளிய காரியங்களைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு உடல் ஒத்துழைக்காது.
புற்றுநோய் கட்டிகள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் உறிஞ்சுவதால், உடல் எவ்வித வேலையும் செய்யாமலேயே மிகுந்த பலவீனத்தை அடையும். சில நேரங்களில் இது உடலுக்குள் ஏற்படும் உட்புற இரத்தப்போக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
"சோர்வு என்பது புற்றுநோயை மட்டுமே குறிக்காது; ஆனால் காரணமே இல்லாமல் நீண்ட நாட்களாக இருக்கும் சோர்வைப் புறக்கணிப்பது, நோய் தீவிரமடைந்த பிறகு கண்டறியப்படும் ஆபத்தை உண்டாக்கும்," என்கின்றனர் வைத்தியர்கள்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது உயிரைக் காக்க உதவும்
உங்களுக்கு எப்போதும் சோர்வாக இருக்கிறதா சாதாரண அசதி என நினைக்க வேண்டாம் இன்றைய அவசர உலகில் சோர்வு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தூக்கமின்மை எனப் பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டாலும், உங்கள் சோர்வு நீண்ட நாட்களாகத் தொடர்கிறது என்றால் அதனைச் சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இது புற்றுநோய் போன்ற தீவிர பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் எனச் சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சையத் அஃப்ரோஸ் ஹுசைன் எச்சரிக்கிறார்.வழக்கமான சோர்வு என்பது ஓய்வு எடுத்தாலோ அல்லது நன்றாகத் தூங்கி எழுந்தாலோ சரியாகிவிடும்.ஆனால் புற்றுநோய் தொடர்பான சோர்வு என்பது முற்றிலும் மாறுபட்டதுநபோதுமான ஓய்வு எடுத்த பிறகும், தூங்கி எழுந்த பிறகும் சோர்வு குறையாமல் அப்படியே இருக்கும்.படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எளிய காரியங்களைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு உடல் ஒத்துழைக்காது.புற்றுநோய் கட்டிகள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் உறிஞ்சுவதால், உடல் எவ்வித வேலையும் செய்யாமலேயே மிகுந்த பலவீனத்தை அடையும். சில நேரங்களில் இது உடலுக்குள் ஏற்படும் உட்புற இரத்தப்போக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம்."சோர்வு என்பது புற்றுநோயை மட்டுமே குறிக்காது; ஆனால் காரணமே இல்லாமல் நீண்ட நாட்களாக இருக்கும் சோர்வைப் புறக்கணிப்பது, நோய் தீவிரமடைந்த பிறகு கண்டறியப்படும் ஆபத்தை உண்டாக்கும்," என்கின்றனர் வைத்தியர்கள்.எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது உயிரைக் காக்க உதவும்