• Oct 07 2026

முன்பள்ளிகளில் இனி வெவ்வேறு பாடத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளியா? அடுத்த ஆண்டு முதல் என்ன நடக்கும்?

Chithra / Oct 6th 2026, 11:25 am
image


அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளிலும் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, எதிர்வரும் ஆண்டு முதல் முன்பள்ளிகளில் வெவ்வேறு கல்வி முறைகள் மற்றும் வெவ்வேறு பாடத்திட்டங்களின் அடிப்படையில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் மனிதவளத்தை உருவாக்குவதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பிரதான பொறுப்பை வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்பள்ளிக் கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன், தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, முன்பள்ளி, பாடசாலை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட மூன்று துறைகளிலும் கல்வியைச் சீர்திருத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

முன்பள்ளிகளில் இனி வெவ்வேறு பாடத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளியா அடுத்த ஆண்டு முதல் என்ன நடக்கும் அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளிலும் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார். அதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, எதிர்வரும் ஆண்டு முதல் முன்பள்ளிகளில் வெவ்வேறு கல்வி முறைகள் மற்றும் வெவ்வேறு பாடத்திட்டங்களின் அடிப்படையில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் மனிதவளத்தை உருவாக்குவதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பிரதான பொறுப்பை வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்பள்ளிக் கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, முன்பள்ளி, பாடசாலை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட மூன்று துறைகளிலும் கல்வியைச் சீர்திருத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement