• Apr 20 2026

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு - ஜோசப் ஸ்டாலின் விசனம்

Chithra / Jan 4th 2026, 1:12 pm
image


கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.  40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும்.


நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள  தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 


கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும்.


2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல.


40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. 


ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு - ஜோசப் ஸ்டாலின் விசனம் கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.  40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும் அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும்.நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள  தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும்.2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல.40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement