• May 19 2026

மூன்று நாட்களாக காணாமல்போயிருந்த வயோதிபர் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு

Chithra / Dec 30th 2025, 11:33 am
image

 

கம்பளை பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கம்பளை பிரதான சாலையில் அமைந்துள்ள பெரிய பாலத்தின் கீழ், ஆற்றில் மிதந்த நிலையில் இந்த சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.


தொழுவ கவுடுபிட்டிய பகுதியைச் சேர்ந்த  62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 


குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், நேற்று மாலை மகாவலி  ஆற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று நாட்களாக காணாமல்போயிருந்த வயோதிபர் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு  கம்பளை பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கம்பளை பிரதான சாலையில் அமைந்துள்ள பெரிய பாலத்தின் கீழ், ஆற்றில் மிதந்த நிலையில் இந்த சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.தொழுவ கவுடுபிட்டிய பகுதியைச் சேர்ந்த  62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், நேற்று மாலை மகாவலி  ஆற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement