யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த இளைஞன் நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இவரை தேடும் பணி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இளைஞனின் சடலம் அதே பகுதியில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஆவார்.
சடலத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்
நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்று பறிபோன உயிர்; கரையொதுங்கிய இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.குறித்த இளைஞன் நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.இவரை தேடும் பணி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இளைஞனின் சடலம் அதே பகுதியில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஆவார்.சடலத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்