• Sep 28 2026

மட்டக்களப்பில் தேவாலயம் முன் சடலமாக கிடந்த பெண்! விசாரணையில் அதிர்ச்சி

Chithra / Sep 28th 2026, 11:32 am
image


மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இன்று (28) காலை இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த 67 வயதான இராசையா பாக்கியம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் தேவாலயம் முன் சடலமாக கிடந்த பெண் விசாரணையில் அதிர்ச்சி மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று (28) காலை இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த 67 வயதான இராசையா பாக்கியம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement