கந்தளாய் சூரியபுர வயல்வெளிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, இடது முன்காலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமார் 30 வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
சூரியபுர விவசாய நிலப்பகுதியை ஒட்டிய வயல்வெளியில் பல நாட்களாக நகர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த யானையை அவதானித்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக கந்தளாய் வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிரித்தல வனவிலங்கு கால்நடை சிகிச்சைப் பிரிவின் கால்நடை வைத்திய அதிகாரி சமீர கலிங்கராச்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
யானையின் இடது முன்காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக அதன் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே மயக்க மருந்து செலுத்தப்பட்டு, பல மணிநேரங்கள் நீடித்த சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பல நாட்களாக உணவு மற்றும் நீரின்றி தவித்திருந்த யானைக்கு காயச் சிகிச்சையுடன் தேவையான மருத்துவ பராமரிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும் அதன் உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் தொடர்ச்சியான மருத்துவ மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது குறித்த யானை அபாயக் கட்டத்தைத் தாண்டி படிப்படியாக குணமடைந்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்களின் துரிதமான தகவல் வழங்கலும், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பான சேவையும் இணைந்ததன் விளைவாக யானையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கந்தளாய் சூரியபுர பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை கந்தளாய் சூரியபுர வயல்வெளிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, இடது முன்காலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமார் 30 வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.சூரியபுர விவசாய நிலப்பகுதியை ஒட்டிய வயல்வெளியில் பல நாட்களாக நகர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த யானையை அவதானித்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக கந்தளாய் வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் வழங்கினர்.தகவலையடுத்து கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிரித்தல வனவிலங்கு கால்நடை சிகிச்சைப் பிரிவின் கால்நடை வைத்திய அதிகாரி சமீர கலிங்கராச்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.யானையின் இடது முன்காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக அதன் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே மயக்க மருந்து செலுத்தப்பட்டு, பல மணிநேரங்கள் நீடித்த சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.பல நாட்களாக உணவு மற்றும் நீரின்றி தவித்திருந்த யானைக்கு காயச் சிகிச்சையுடன் தேவையான மருத்துவ பராமரிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும் அதன் உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் தொடர்ச்சியான மருத்துவ மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது குறித்த யானை அபாயக் கட்டத்தைத் தாண்டி படிப்படியாக குணமடைந்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிராம மக்களின் துரிதமான தகவல் வழங்கலும், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பான சேவையும் இணைந்ததன் விளைவாக யானையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.