கம்பளை பகுதியில் நேற்று இரவு வீசிய கடுமையான காற்றினால், அங்குள்ள கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைகள் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியின் 1 மற்றும் 2ஆம் வகுப்பு அறைகளின் கூரைகளின் மீது குறித்த மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வகுப்பறைகளின் கூரைகள் மற்றும் கட்டிடப் பகுதிகள் சேதமடைந்துள்ளன.
மரம் இன்னும் வகுப்பறைகளின் மீது காணப்படுவதால், மாணவர்கள் அந்த அறைகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வகுப்பறைகள் தற்காலிகமாக பயன்படுத்தப்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மரத்தை அகற்றும் பணிகள் மற்றும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுங்காற்றால் பாடசாலை வகுப்பறைகள் மீது முறிந்து விழுந்த மரம் கம்பளை பகுதியில் நேற்று இரவு வீசிய கடுமையான காற்றினால், அங்குள்ள கம்பளை சாஹிரா கல்லூரியின் வகுப்பறைகள் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரியின் 1 மற்றும் 2ஆம் வகுப்பு அறைகளின் கூரைகளின் மீது குறித்த மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வகுப்பறைகளின் கூரைகள் மற்றும் கட்டிடப் பகுதிகள் சேதமடைந்துள்ளன.மரம் இன்னும் வகுப்பறைகளின் மீது காணப்படுவதால், மாணவர்கள் அந்த அறைகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வகுப்பறைகள் தற்காலிகமாக பயன்படுத்தப்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது மரத்தை அகற்றும் பணிகள் மற்றும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.