• Apr 24 2026

திருகோணமலையில் தீடீரென தீப்பற்றிய இத்தி மரம்!

Ziya / Apr 24th 2026, 10:27 am
image

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் -பாலத்தோப்பூர் சந்தியில் காணப்பட்ட பழமையான இத்தி மரமொன்று நேற்றிரவு (23) தீப்பற்றி எரிந்துள்ளது.


பழமையான இம் மரமானது தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.


இம் மரமானது தீப்பற்றி எரிந்து வீதியில் விழுந்தமையால் பாலத்தோப்பூர் பாலத்தின் ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டிருந்தது.


இதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்,பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


இதன்பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.  


திருகோணமலையில் தீடீரென தீப்பற்றிய இத்தி மரம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் -பாலத்தோப்பூர் சந்தியில் காணப்பட்ட பழமையான இத்தி மரமொன்று நேற்றிரவு (23) தீப்பற்றி எரிந்துள்ளது.பழமையான இம் மரமானது தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.இம் மரமானது தீப்பற்றி எரிந்து வீதியில் விழுந்தமையால் பாலத்தோப்பூர் பாலத்தின் ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டிருந்தது.இதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்,பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.இதன்பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement