• Oct 29 2026

திருகோணமலையில் இளம் பெண்ணிடம் சிக்கிய இலட்சக்கணக்கான பணம்! யாழிலும் இளைஞர்கள் கைது! நடந்தது என்ன?

Chithra / Oct 28th 2026, 7:56 am
image


 

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு பொலிஸ் நடவடிக்கைகளில் பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 500 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதேவேளை, திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 150 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 26ஆம் திகதி உப்புவெளி பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 150 போதை மாத்திரைகளுடன் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண் நேற்று (27) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது சந்தேகநபரை ஒரு வார காலம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 

திருகோணமலையில் இளம் பெண்ணிடம் சிக்கிய இலட்சக்கணக்கான பணம் யாழிலும் இளைஞர்கள் கைது நடந்தது என்ன  யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு பொலிஸ் நடவடிக்கைகளில் பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 500 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 150 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 26ஆம் திகதி உப்புவெளி பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 150 போதை மாத்திரைகளுடன் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் நேற்று (27) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேகநபரை ஒரு வார காலம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement