• May 14 2026

சிலை மீது கிடந்த தலை; பிறந்தநாளில் அரங்கேறிய பயங்கரத்தின் திடுக்கிடும் பின்னணி

Chithra / May 14th 2026, 11:18 am
image

அம்பலாந்தோட்டை - மாமடல பகுதியில் ரத்னாவலி தேவியின் சிலையின் கையில் மனிதத் தலை வைக்கப்பட்ட கொலையின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


கடந்த 11ஆம் திகதி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த 34 வயதுடைய லக்மால் சந்தருவன் (பொடி) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது தலை துண்டிக்கப்பட்டு சிலையின் கைகளில் வைக்கப்பட்டது. 


கொலை செய்யப்பட்ட 'பொடி 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி மாமடல பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராவார். அவர் மார்ச் 30 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்திருந்தார். 


இந்நிலையில் இந்த முக்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த 'மெத்த பொடி' என்பவரின் மரணத்திற்குப் பழிவாங்கவே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.


இந்த கொலையுடன் தொடர்புடைய மெத்த லொக்கு, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்லப்பட்டவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். 


இத்திட்டத்தைத் தீட்டியதாகக் கருதப்படும் 'கருணா லொக்கா', கொலையிலிருந்து தப்பிக்கத் தந்திரமாக அன்றைய தினமே பழைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலுக்குச் சென்றுள்ளார்.


சட்டவிரோத மதுபான வியாபாரப் போட்டியும், பொலிஸாருக்குத்  தகவல் வழங்கியதாக ஏற்பட்ட பகையுமே இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணமாகும்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அமில ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


சிலை மீது கிடந்த தலை; பிறந்தநாளில் அரங்கேறிய பயங்கரத்தின் திடுக்கிடும் பின்னணி அம்பலாந்தோட்டை - மாமடல பகுதியில் ரத்னாவலி தேவியின் சிலையின் கையில் மனிதத் தலை வைக்கப்பட்ட கொலையின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 11ஆம் திகதி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த 34 வயதுடைய லக்மால் சந்தருவன் (பொடி) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது தலை துண்டிக்கப்பட்டு சிலையின் கைகளில் வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட 'பொடி 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி மாமடல பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராவார். அவர் மார்ச் 30 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்திருந்தார். இந்நிலையில் இந்த முக்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த 'மெத்த பொடி' என்பவரின் மரணத்திற்குப் பழிவாங்கவே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.இந்த கொலையுடன் தொடர்புடைய மெத்த லொக்கு, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்லப்பட்டவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். இத்திட்டத்தைத் தீட்டியதாகக் கருதப்படும் 'கருணா லொக்கா', கொலையிலிருந்து தப்பிக்கத் தந்திரமாக அன்றைய தினமே பழைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலுக்குச் சென்றுள்ளார்.சட்டவிரோத மதுபான வியாபாரப் போட்டியும், பொலிஸாருக்குத்  தகவல் வழங்கியதாக ஏற்பட்ட பகையுமே இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணமாகும்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அமில ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement