திருகோணமலை - மூதூர், ஷாபி நகர் பகுதியில் ஒரு வயதும் எட்டு மாதங்களும் மதிக்கத்தக்க பெண் குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஆலியா என்ற குழந்தையே இவ்வாறு அகால மரணமடைந்துள்ளார்.
வீட்டின் அருகே தேங்கியிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீர் நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை; மூதூரில் சோகம் திருகோணமலை - மூதூர், ஷாபி நகர் பகுதியில் ஒரு வயதும் எட்டு மாதங்களும் மதிக்கத்தக்க பெண் குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஆலியா என்ற குழந்தையே இவ்வாறு அகால மரணமடைந்துள்ளார். வீட்டின் அருகே தேங்கியிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.