நில்வலா கங்கையில் தவறி விழுந்து சமையல் கலைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் அக்குரஸ்ஸ பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நிமித்தமாக காலி நோக்கிச் சென்றிருந்த நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவக்க, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான சமையல் கலைஞர் ஒருவர் அக்குரஸ்ஸ நகரப் பகுதியில் உள்ள நில்வலா கங்கையின் பாதுகாப்பற்ற இடமொன்றில் இருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் பேருந்திலிருந்து இறங்கிய பின்னர் தனது காலணியை அணிய முயன்றபோது நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரை காணாமல் போன நபர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நில்வலா கங்கையில் தவறி விழுந்த சமையல் கலைஞர் - தேடும் பணி தீவிரம் நில்வலா கங்கையில் தவறி விழுந்து சமையல் கலைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் அக்குரஸ்ஸ பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொழில் நிமித்தமாக காலி நோக்கிச் சென்றிருந்த நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மொரவக்க, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான சமையல் கலைஞர் ஒருவர் அக்குரஸ்ஸ நகரப் பகுதியில் உள்ள நில்வலா கங்கையின் பாதுகாப்பற்ற இடமொன்றில் இருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர் பேருந்திலிருந்து இறங்கிய பின்னர் தனது காலணியை அணிய முயன்றபோது நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவத்தையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரை காணாமல் போன நபர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.