• May 16 2026

விஜயின் பிரச்சாரத்தில் பலியான 2 வயது குழந்தை; கல்லறை முன்பாக கதறிய தாய்மாமன்!

shanu / Sep 29th 2025, 3:40 pm
image

விஜயின் பிரச்சாரத்தில் உயிரிழந்த 2 வயதான குழந்தையின் கல்லறை முன்பாக அவரது தாய்மாமன் கதறித்துடித்த காட்சி மனதை உருக வைத்துள்ளது.  


கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  


பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 


உயிரிழந்தோரின் உடற்கூற்றுப் பரிசோதனை நிறைவுற்றதும் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 


கூட்ட நெரிசலில் சிக்கி  2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரைது நெஞ்சையும் உலுக்க வைத்துள்ளது. 


குழந்தை உயிரிழந்துவிட்டதை தாங்கமுடியாமல் குழந்தையின் தந்தை கைகளில் குழந்தையை ஏந்தியவாறு வைத்தியசாலை முழுவதையும் கதறித்துடித்து ஓடியுள்ளார். 


இதனையே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தற்போது அந்தக் குழந்தையின் கல்லறையின் முன்னால் தாய்மாமன் விழுந்து கதறும் காட்சி மனதை உலுக்கியுள்ளது. 


அவரின் கதறலில் கூத்தாடி பின்னாடி போய் பிஞ்சு குழந்தையை பறிகொடுத்து  விட்டீர்களடா?, 

எங்கள் குழந்தைகளின் தாய்மாமன் என்று  பேனர் வைத்தார்கள் - இன்னைக்கு அழுகிறது எந்த தாய் மாமன். என்றவாறு கத்திக்கூச்சலிட்டு துடித்துள்ள சம்பவம் ஒரு கணம் உருக வைத்துள்ளது. . 


கூட்டத்தில் சிக்கித்தவித்து பல உயிரிழப்புக்கள் பதிவானதையடுத்து விஜய் மீதான விமர்சனங்கள் பல்வேறு பக்கங்களில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜயின் பிரச்சாரத்தில் பலியான 2 வயது குழந்தை; கல்லறை முன்பாக கதறிய தாய்மாமன் விஜயின் பிரச்சாரத்தில் உயிரிழந்த 2 வயதான குழந்தையின் கல்லறை முன்பாக அவரது தாய்மாமன் கதறித்துடித்த காட்சி மனதை உருக வைத்துள்ளது.  கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் உடற்கூற்றுப் பரிசோதனை நிறைவுற்றதும் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி  2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரைது நெஞ்சையும் உலுக்க வைத்துள்ளது. குழந்தை உயிரிழந்துவிட்டதை தாங்கமுடியாமல் குழந்தையின் தந்தை கைகளில் குழந்தையை ஏந்தியவாறு வைத்தியசாலை முழுவதையும் கதறித்துடித்து ஓடியுள்ளார். இதனையே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தற்போது அந்தக் குழந்தையின் கல்லறையின் முன்னால் தாய்மாமன் விழுந்து கதறும் காட்சி மனதை உலுக்கியுள்ளது. அவரின் கதறலில் கூத்தாடி பின்னாடி போய் பிஞ்சு குழந்தையை பறிகொடுத்து  விட்டீர்களடா, எங்கள் குழந்தைகளின் தாய்மாமன் என்று  பேனர் வைத்தார்கள் - இன்னைக்கு அழுகிறது எந்த தாய் மாமன். என்றவாறு கத்திக்கூச்சலிட்டு துடித்துள்ள சம்பவம் ஒரு கணம் உருக வைத்துள்ளது. . கூட்டத்தில் சிக்கித்தவித்து பல உயிரிழப்புக்கள் பதிவானதையடுத்து விஜய் மீதான விமர்சனங்கள் பல்வேறு பக்கங்களில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement